கலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையொ ன்றை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த திருடர்கள், அங்கிருந்த பாலியல் பொம்மையைப் பார்த்து பயந்தோடிய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
ஓவியரான டெரிக் தொம்சன் என்பவர், இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள டேரிங் நகரில் கலைப்பொருட்கள் விற்பனை நிலையமொன்றை நடத்தி வருகிறார்.
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, பெண் போன்ற தோற்றம் கொண்ட பாலியல் பொம்மையொன்றையும் இவர் கடந்த வருடம் வாங்கி வைத்திருந்தார். ஷேலா எனப் பெயரிடப்பட்ட 6 அடி உயரமான அந்த பொம்மைக்கு விதம் விதமான ஆடை அலங்காரங்களைச் செய்து தனது கடையிலுள்ள ஆசனமொன்றில் அமர வைத்திருந்தார் டெரிக் தொம்ஸன்.
இந்நிலையில், கடந்த 8 ஆம் திகதி இரவு மேற்படி கடையில் திருடுவதற்காக உள்ளே புகுந்த திருடர்கள், அந்த பாலியல் பொம்மையைக் கண்டவுடன் பயந்தோடி விட்டனராம். கதிரையில் உண்மையான பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார் என அவர்கள் எண்ணியமையே இதற்கான காரணம்.
திருடர்கள் சுமார் 1,000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 185,000) ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாகவும், “ஷேலா” இல்லாதிருந்தால் திருடர்கள் மேலும் பொருட்களை திருடியிருக்கக்கூடும் எனவும் 42 வயதான டெரிக் தொம்சன் கூறியுள்ளார்.








