பிரிட்டனைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது முன்னாள் காதலியின் மீது கொண்ட பொறாமையால், காதலியின் வீட்டை உடைத்துக்கொண்டு புகுந்து, காதலியின் உள்ளாடையை திருடியதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
21 வயதான கெய்லர் புரோபி எனும் இந்த இளைஞனும் 20 வயதான குளோ றீஸ் எனும் யுவதியும் காதலித்தனர். பின்னர் இவர்களின் காதல் முறிந்தது.
இராணுவ சிப்பாயான ஆரோன் பொன்ட் என்பவரை குளோ றீஸ் காதலிக்க ஆரம்பித்ததால் கெய்லர் கடும் ஆத்திரமடைந்தான்.
அதன்பின் குளோஸ் றீஸை பழிவாங்கும் நடவடிக்கையில் கெய்லர் புரோபி ஈடுபட்டான். குளோஸ் றீஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் கெய்லர் ஈடுபட்டதால், குளோஸ் றீஸிடமிருந்து விலகியிருக்குமாறும் அவருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்குமாறும் கெய்லருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது.
எனினும், இந்த உத்தரவுகளை மீறும் நடவடிக்கையில் கெய்லர் ஈடுபட்டதாக மீண்டும் வழக்குத் தொடுக்கப்பட்டது. தனது முன்னாள் காதலி குளோஸ் றீஸின் வீட்டுக்குள் புகுந்து குளோஸின் உள்ளாடையை திருடியதாகவும் வேறு பல ஆடைகளை துண்டு துண்டாக கத்தரித்ததாகவும் கெய்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அத்துடன், கெய்லரும் அரோனும் பிக் அப் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்தபோது குளோ றீஸ் மீது சுத்தியல் ஒன்றை எறிந்ததாகவும் கெய்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவ் வழக்கை விசாரித்த ஸ்வான்ஸ் கிரவுண் நீதிமன்றமானது, முந்தைய உத்தரவுகளை விடுத்து கெய்லர் புரோப்பிக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கெய்லர் புரோப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தான் பாதுகாப்பாக உணர்வதாக குளோஸ் றீஸ் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளார்.






