வடமாகாண விவசாய அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா கடந்த (22.01.2017) கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சிறந்த கோழி பண்ணையாளர் விருது -2016 இனை கனகராஜன்குளத்தை சேர்ந்த டேவிட் அலெக்ஸ் தாவீத் அமிர்த ராஜா என்பவர் பெற்றுகொண்டார்.
வடக்கு விவசாய அமைச்சு ஆண்டு தோறும் பயிர்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ரீதியில் போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்ற சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் உழவர் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
கடந்த 2016 ஆம் ஆண்டில் சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர், சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர், வயல் நிலங்களில் சிறந்த பயிர் மாற்றீட்டுச் செய்கையாளர், சிறந்த சேதன உள்ளீடு உற்பத்தியாளர், சிறந்த காளான்செய்கையாளர், சிறந்த பழச்செய்கையாளர் என பல பிரிவுகளில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 120 சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது கேடயங்களும், சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கி வைக்கபட்டது.