இளைஞனின் உயிரை பறிந்த மர்மக்குழி : யுவதிக்கு ஏற்பட்ட நிலை!!

964

வத்தளை – எலகந்த வீதியில் உள்ள பாதுகாப்பற்ற குழி ஒன்றில் வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது அதில் பயணம் செய்த யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக 24 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யுவதியில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழி பகுதி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், அதிகமான விபத்துக்கள் அங்கு இடம்பெற்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வத்தளை – எலகந்த – திக்ஒவிட்ட வீதியின் அருகாமையில் இந்த பாதுகாப்பற்ற குழி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.