மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம்!!

588

கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்றுநோயால் பாதிக்கப்படாத 1,60,000 பேரைக்கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் குறைந்தளவு மன உளைச்சல் அடைந்தவர்களை விட, மன உளைச்சலால் அதிகப் பாதிப்படைந்தவர்களுக்கு பல வகையான புற்று நோய்கள் ஏற்படும் உயிராபத்து மூன்று பங்கு அதிகமுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

குடல், விந்துப்பை, கணையம் மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய் ஆபத்து இவர்களுக்கு அதிகமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த ஒரு திட்டவட்டமான காரண இணைப்பை உருவாக்க மேலும் அதிக ஆய்வுப்பணி தேவைப்படுவதாக பி.எம்.ஜே. என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.