விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சங்கக்கார-மஹேல!!

721

எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை அணி தென் ஆபிரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், மூன்று T20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றது.

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை வீர்ர்களின் திறமை மற்றும் அணித் தலைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

மேலும் இலங்கை அணியின் தலைமை பொறுப்பில் இருந்து அஞ்சலோ மத்தியூஸ் விலகுவதற்கு இது சரியான தருணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியிலும் இலங்கை தோல்வியை தழுவியதையடுத்து அணியின் மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்தது விமர்சனங்கள் வலுப்பெற தொடங்கின.

எனினும் இரண்டாவது டி20 போட்டியில் மத்தியூஸின் அதிரடியுடன் இலங்கை வெற்றி பெற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொடங்கியது. இந்த போட்டியின் பின்னர் மத்தியூஸின் மீதான விமர்சனங்களும் குறைவடைந்தது.

அத்தோடு இந்த வெற்றியை தொடர்ந்து “உங்கள் மீதான விமசர்னங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு இதைதவிர சரியான வழி எதுவும் இல்லை” இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் அஞ்சலா மத்தியூஸ் களமிறங்காமல் இருந்தமையால் இலங்கை அணியின் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.

எனினும் போட்டியின் முடிவில் இலங்கை அணி தனது அபார திறமையை வெளிப்படுத்தி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மஹே ஜயவர்தன, இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது. குறிப்பாக நிரோசன் டிக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அணியின் திறமை மீது அனைவரும் நம்பிக்கை வைத்து பொறுமையுடன் ஆதரவு வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.