ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வீரர்!!

418

அவுஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் கிளப் அணியின் பந்து வீச்சாளர் ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கோல்டன் பொயிண்ட் கிரிக்கெட் கிளப்- ஈஸ்ட் பலாரட் அணிகள் மோதின.

இதில் ஈஸ்ட் பலாரட் அணி துடுப்பெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது கோல்டன் பொயிண்ட் கிரிக்கெட் கிளப் அணியின் 29 வயதான ஆலெட் கோரி 9வது ஓவரை வீசினார்.

இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் எதிரணி வீரர்கள் முதல் ஸ்லிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வீரர் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேறினார்.

அடுத்த மூன்று பேரையும் க்ளீன் போல்ட் மூலம் வீழ்த்தினார். இதனால் ஈஸ்ட் பலாரட் அணி 40 ஓட்டங்களில் சுருண்டது. ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளார்.