லண்டன் நகரில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகரத்தின் தெற்கே உள்ள நகரங்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, தென் கிழக்கு பகுதிகளில் 70mph வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், கடலோர பகுதிகளில் 80mph வேகத்தை விடவும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டன் நகரில் அமைதியற்ற காலநிலை தாக்கும் எனவும், வேல்ஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் செயற்படும் வகையில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த காலநிலை மாற்றத்தினால் லண்டன் நகரில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், லண்டன் நகரில் நிச்சயமாக சில பாதிப்புடனான தெளிவற்ற காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை ஆராய்ச்சி நிலைய வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு இங்கிலாந்தில் மின்சார தடை மற்றும் பயண தாமதங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று, வெள்ளம், மரம் முறிதல் மற்றும் கட்டிட சேதங்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புயலுடனான காலநிலை, இங்கிலாந்து முழுவதும் உறைபனி வெப்பநிலை ஏற்படுத்தும் எனவும், கடும் மூடுபனி காரணமாக லண்டன் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பயணிப்பதிலும் சிரமம் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.