வவுனியா – கோவில்குளத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி (அம்பியூலன்ஸ்) திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி சிவன்கோயிலடியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வண்டியின் சாரதிக்கு திடீரென உடல்நிலை பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக வீதியை விட்டு விலகி குறித்த பகுதியிலுள்ள ஒரு வீட்டினுடைய சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காவு வண்டியில் நோயாளர் யாரும் இல்லை என்பதும், இவ்விபத்தில் எதுவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.