டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பது அம்பலமாகியுள்ளது. இந்தவிடயம் தொடர்பிலான தகவல் பிரபல தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த அலைவரிசையின் செய்தியாளர் மெட்ரோ ரயில் நிலைத்திற்கு சென்று துப்புரவுத் தொழிலாளி ஒருவரிடம் தானும் தனது பெண் நண்பரும் நேரம் செலவிட ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஊழியர் 500 ரூபா கேட்டுள்ளார் 300 முதல் 500 வரை அளித்தால் ஜோடிகள் தனிமையில் ஒரு மணிநேரம் இருக்க அனுமதிக்கப்படுகிறார்களாம். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி அனுஜ் தயால் கூறுகையில்..
தொலைக்காட்சி அலைவரிசையில் வெளியான விவகாரம் குறித்த சிடி எங்கள் நிறுவனத்தின் தலைமை பாதுாப்பு கமிஷனிரடம் அளிக்கப்பட்டுள்ளது. யாராவது தவறு செய்தது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய கழிவறைகள் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறது என்றார். முன்னதாக கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் வெளியாகின.