துடுப்­பாட்­டத்தை மெரு­கேற்­று­வ­தற்­காக ஹோட்டல் சிப்­பந்­தியின் ஆலோ­ச­னையை பின்­பற்­றிய சச்சின் டெண்­டுல்கர்!!

568

சென்னை ஹோட்டல் சிப்­பந்தி (வெய்ட்டர்) ஒருவர் வழங்­கிய ஆலோ­ச­னையின் பல­னா­கவே சச்சின் டெண்­டுல்­கரின் துடுப்­பாட்டம் நுட்பத் திறன்­மிக்­க­தாக மாறி­யது. அவ­ரது ஆலோ­ச­னையைப் பின்­பற்­றி­யதன் மூலம் சச்­சினின் துடுப்­பாட்டம் பிர­கா­ச­ம­டைந்­தது. இது குறித்த தக­வலை சச்சின் டெண்­டுல்­கரே வெளி­யிட்­ட­தாக இந்­தியத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இரு­வகை பிர­தான சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கு­களில் துடுப்­பாட்ட உலக சாத­னை­யா­ள­ரான சச்சின் டெண்­டுல்­க­ருக்கு ஹோட்டல் சிப்­பந்தி ஒருவர் ஆலோ­சனை வழங்­கு­வ­தென்­பது வழ­மைக்கு மாறா­ன­தாக இருக்­கலாம். ஆனால் அந்த ஆலோ­சனை தன்னை வெகு­வாக முன்­னேற வைத்­த­தாக அவரே கூறு­கின்றார்.

ஒரு முறை நான் சென்னை சென்­றி­ருந்­த­போது ஹோட்­டலில் வைத்து சிப்­பந்தி ஒருவர் தன்னை அணுகி ஆலோ­சனை ஒன்று வழங்­க­லாமா என தன்­னிடம் கேட்­ட­தாக சச்சின் கூறு­கின்றார்.

‘‘நான் ஹோட்­டலில் இருந்­த­போது என்னை அணு­கிய ஹோட்டல் சிப்­பந்தி, நீங்கள் துடுப்பை சுழற்­றும்­போது உங்­க­ளது முழங்கை காப்பில் (எல்போ கார்ட்) துடுப்பின் கைப்­பிடிப் பகுதி படு­வதால் அதன் சுழற்சி தடுக்­கப்­ப­டு­கின்­றது என என்­னிடம் சுட்­டிக்­காட்­டினார். அவர் கூறி­யது நூற்­றுக்கு நூறு உண்மை. அவ­ரது கணிப்பு மிகவும் சரி­யா­னது’’ என சச்சின் தெரி­வித்தார்.

‘‘திறந்த மன­துடன் இருந்தால் பல விட­யங்­களில் முன்­னே­ற­மு­டியும். முழங்கை காப்பு எனக்கு அசௌ­க­ரி­யத்தைக் கொடுக்­கின்­றது என்­பதை உணர்ந்­தி­ருந்தேன். ஆனால் நானா­கவே மாற்ற முன்­வ­ர­வில்லை. சில வரு­டங்­களின் பின்னர் எனது முழங்கை காப்பில் பந்­து­பட்­ட­போது நான் பெரும் உபா­தைக்­குள்­ளானேன். அதன் பின்­னரே முழங்கை காப்­பி­னுள்ள இருந்த திட்டு போதாது என்­பதை உணர்ந்தேன்.

அத்­துடன் துடுப்பை இல­கு­வாக சுழற்­றக்­கூ­டிய விதத்தில் முழங்கை காப்பின் வடி­வத்­தையும் மாற்றி அமைத்தேன். நமது தேசத்தில் வெற்­றிலை விற்பவரிலிருந்து பிரதம நிறைவேற்று அதிகாரிவரை ஆலோசனை வழங்கக்கூடியவர்கள். ஆனால் அவற்றை ஏற்கும் மனப்பக்குவம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்’’ என்றார் சச்சின்.