காதலனுடன் சேர்ந்து இஸ்லாமிய விதிகளை மீறிய பெண் : பலர் முன்னிலையில் கொடூர தண்டனை!!

583

இந்தோனிஷியாவில் காதலனுடன் சேர்ந்து உறவு வைத்துக் கொண்ட காதலிக்கு பொது மக்கள் முன்னிலையில் 26 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனிசியாவின் Banda Aceh பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் அவருடைய காதலரும் திருமணத்திற்கு முன்னர் உறவு வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தோனிசியாவில் Sharia law பின்பற்றப்பட்டு வருகிறது. ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால் அதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லக் கூட செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இப்பெண் இஸ்லாமிய விதிகளை மீறியதால், பலர் முன்னிலையில் அவருக்கு 26 சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தண்டனையின்போது அப்பெண் உடல் முழுவது உடைகளை உடுத்திக் கொண்டு ஒரு மேடை மீது பலர் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டார்.

அவருக்கு சவுக்கடி கொடுக்கும் நபர் தொடர்ந்து சவுக்கடி கொடுத்துக் கொண்டிருந்த போது, வலி தாங்கமுடியாமல் அப்பெண் துடித்து கதறியது, மனதை உருகவைத்தது.

அப்பெண் கிழே விழுந்தும், தண்டனைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இதே போன்று தான் இவருடைய காதலருக்கும் இதே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.