வவுனியா இ.போ.ச ஊழியர்களுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பு!!

367

 
வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கேட்டறிந்து கொள்வதற்கு நேற்று (02.02.2017) இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான செ. மயூரன், ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்,

இன்று (03.02.2017) வவுனியா வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன் ஆகியோர் இ.போச சாலை ஊழியர்களைச் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.