கிளிநொச்சியில் மர்ம நபர்களால் பூசகர் வெட்டிக்கொலை!!

471

MURDER

கிளிநொச்சி, அம்பாள்குளம் பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் 18ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது வீட்டிலேயே கோயில் அமைத்து பூஜை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பூசாரி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 69 வயது மதிக்கத்தக்க ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.