மன்னார் விபத்தில் மூவர் காயம்!!

388

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,

மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 3 பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகனை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.