யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானும் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று நண்பகல் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுற்றுலாப்பயணிகளின் சாரதி உள்ளிட்ட நான்கு பேர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் ஹயஸ் வான் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்றுள்ளது. தொடர்ந்து, நாவலர் வீதியிலிருந்து ஏ9 வீதியை நோக்கி பயணித்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் சந்தியை கடக்க முற்பட்ட வேளையில் இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற ஹயஸ் வானின் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.