வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகம் திறந்துவைப்பு!!

591

 
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் இன்று (15.02) பிற்பகல் 3 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த பணியகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 இலட்சம் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட இப்பணியகத்தினை ஜக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரிம்சுட்டான், ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உணா மககுலி, ஜரோப்பிய சங்கத்த்தின் இலங்கை, மாலைதீவு, வதிவிடப்பிரதிநிதி துங் லாய் மாகு, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபயகோன், ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.