இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!!

461

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 194280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜனவரி 219360 சுற்றுலா பயணிகள் வருகை தந்துளள்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் கடந்த வருட ஜனவரி மாதம் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருமானம் 322 மில்லியன் அமெரிக்க டொலராகும், இம்முறை அந்த வருமானம் 363.6 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பொருளாதார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.