பெண் சிங்கமாக உருவெடுக்கும் ஜோதிகா!!

560

தனது கணவர் சிங்கமாக சீறியதை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக பாலா இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது.

பாலா அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தனது படங்களின் மூலம் பிரதிபலித்து வருபவர் அந்த வரிசையில், இந்த படத்தில் ஜோதிகாவின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என்பது பலருக்கும் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது.

இந்நிலையில், இப்படத்தில் ஜோதிகா எந்தமாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், ஜோதிகா பொலிஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிகாவின் கணவரான சூர்யா, சிங்கம் 1, 2, 3 என மூன்று பாகங்களிலும் பொலிஸ் அதிகாரியாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வரிசையில் இந்த படம் மூலம் ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவது அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பாலாவின் பி ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது