வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் காணி மீட்பு போராட்டம்!!

1100

 
வவுனியா, பாரதிபுரம், விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றையதினம் (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா, பாரதிபுரம், விக்ஸ்காட்டுப்பகுதியில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் சுமார் 47 குடும்பங்கள் தாம் தொடர்ந்தும் வனத்துறையினரால் தொந்தரவுக்குள்ளாவதாகவும்
இதேவேளை, தமக்கு காணி உறுதிப் பத்திரமோ, வீட்டுத்திட்டமோ இது வரை வழங்கப்படவில்லை எனவும் சுட்டடிக்காட்டியே இவ் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இரவிரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.