வவுனியாவில் மீண்டும் காணாமற்போனோரின் உறவினர்களின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!!

858

 
வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (24.02.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போன உறவுகள் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பிரதான வீதிவழியாக ஊர்வலமாகச் சென்று, மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக வீதி சென்று அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.