கொலை செய்து புதைக்கப்பட்ட இளம் பெண் : ஒரு மாதத்திற்கு பின் சடலம் மீட்பு!!

460

கண்டி மாவட்டத்தில் ஹெவாஹெட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பாழடைந்த வீடு ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹெவாஹெட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தாயான 22 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை கொலை செய்து விட்டு ஒரு பாழடைந்த வீட்டில் புதைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண்ணுக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாகவும், குறித்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்ணின் சடலத்தை பார்க்கும்போது இந்த கொலை ஜனவரி மாதமளவில் நடந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொலை குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.