10 இலட்சம் கார்களை திரும்ப பெறும் பென்ஸ் நிறுவனம்!!

502

பிரிட்டனிலிருந்து முதல் கட்டமாக சுமார் 75 ஆயிரம் மெர்ஸிடிஸ்-பென்ஸ் கார்களையும், உலக நாடுகளிலிருந்து 10 இலட்சம் பென்ஸ் கார்களையும் திரும்பப் பெறுவதாக குறித்த கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் விற்பனையான பென்ஸ் கார்களில் சுமார் 51 வரையான கார்கள் தீ பிடித்துள்ளதாக எழுப்பப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து உலகமெங்கிலும் விற்கப்பட்ட சுமார் 10 இலட்சம் கற்களை அந்நிறுவனம் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

மேலும் குறித்த தீ பிடிப்பு சம்பவங்களால் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறாத நிலையில், முதல் கட்டமாக 75 ஆயிரம்கற்களை பென்ஸ் நிறுவனம் திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஏ,பி,சி, இ (A, B, C, E) வகுப்பு கார்கள் மற்றும் சிஎல்ஏ(CLA), ஜிஎல்ஏ (GLA) மற்றும் ஜிஎல்சி (GLC) கார்களில், உள்ள செயலாக்கிகலில் ஏற்படும் கோளாறு காரணமாக, சில தனிப்பட்ட சூழலில் மின் பிறப்பாக்கிகள் அதிக சூடாவதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த கார் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கப்படும் பொது குறித்த தீபிடிக்கும் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான கற்கள் குறித்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய கார்நிறுவனமான பென்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது