கிளிநொச்சி ஆனை விழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்துக்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும் இரத்தப் போக்கின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சம்பவம் தொடர்பில் வைத்தியர்களின் விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் கொழும்பில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளதாகவும் குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்து பிறந்த நிலையில் பிள்ளையை இவ்வாறு குழி தோண்டி புதைத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.






