வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

244

 
வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த சில நாட்களாக நகரசபை மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இன் நிலையின் இவ் விளையாட்டு மைதானம் விளையாடுவதற்கு உகந்த நிலையில் இல்லையென ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து கடந்த 14.03.2017 அன்று மைதானத்தை துப்பரவு பின்னரே விளையாட்டில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) காலை 11.30 மணியளவில் மைதானத்தினை பார்வையிட்டதுடன் வவுனியா நகரசபைச் செயலாளருடனும் கலந்துரையாடினார்.

மைதான வாடகையாக ஒருநாளுக்கு ஆயிரத்து 750 ரூபாவும், சுத்தமாக்குவதற்கு என இரண்டாயிரம் ரூபாயும் நகரசபையால் அறவிடப்படுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வகையிலான மைதானம் சீராக இல்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.