இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த சர்ச்சை வீரர் பனேசர்!!

568

monty panesar

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில், சர்ச்சைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேசர் தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்த மாதம் அவுஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிக்கான 17 பேர் கொண்ட வீரர்களை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

இதில் சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேசருக்கு இடம் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் இரவு நேர கிளப் ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டார். இந்த சர்ச்சையை கடந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.



புதுமுக வீரர்களாக கரி பாலன்ஸ், பென் ஸ்டோக்ஸ், போய்ட் ரான்கின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இத்தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி, அடுத்த மாதம் 25ம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு புறப்படுகிறது.

இங்கிலாந்து அணி விபரம்: அலெஸ்டர் குக் (அணித்தலைவர்), ஜோ ரூட், ஜோனாதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயன் பெல், ஜொனி பேர்ஸ்டோவ், மட் பிரையர், ஸ்டூவட் பிராட், சுவான், ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டீவன் பின், ரான்கின், பென் ஸ்டோக்ஸ், மொன்டி பனேசர், கரி பாலன்ஸ், கிறிஸ் டிரம்லட், மைக்கல் கார்பெரி.