மருந்து விஷமானதால் பாடசாலை மாணவன் பலி!!

351

பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்தை அருந்தியதால் 2ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய மாணவன் வீட்டிற்கு வந்து பாடசாலையில் தனக்கு நடுக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் நிலை பின்னர் கவலைக்கிடமானதால், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கரபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இருப்பினும் நேற்றைய தினம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள், “பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்து விஷமானதால் தான் தமது பிள்ளை இறந்ததாக” குற்றம் சுமத்தியுள்ளனர்.

இருப்பினும், தாங்கள் கடந்த 5 வருட காலமாக மாணவர்களுக்கு மருந்து வழங்கி வருவதாகவும், உரிய மருத்துவர்களினால் வழங்கப்பட்ட மருந்தே இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.