டெஸ்ட் தரவரிசைப்படி அணிகளுக்கு பணப்பரிசுகள்!!

469

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட தொடரை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட தென் ஆபி­ரிக்கா 2 தர­வ­ரிசைப் புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்­றது. இதனை அடுத்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் 500,000 அமெ­ரிக்க டொலர்கள் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு பணப்­ப­ரி­சாக வழங்­கப்­பட்­டது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான 4 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2–1 என்ற ஆட்டக் கணக்கில் தன­தாக்­கிக்­கொண்ட இந்­தியா 122 புள்­ளி­க­ளுடன் தர­வ­ரி­சையில் முதலாம் இடத்தைப் பெற்­ற­மைக்­காக செவ்­வா­யன்று ஐ.சி.சி.யின் வெற்­றி­ கோலையும் 10,000,000 அமெ­ரிக்க டொலர் பணப்­ப­ரி­சையும் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை மூன்றாம் இடத்தைப் பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 300,000 அமெ­ரிக்கா டொலர்­களும் நான்காம் இடத்தைப் பெற்ற இங்­கி­லாந்­துக்கு 100,000 அமெ­ரிக்க டொலர்­களும் பணப்­ப­ரி­சாக வழங்­கப்­பட்­டது.

2016 ஏப்ரல் 1ஆம் திக­தி ­முதல் 2017 மார்ச் 31வரை­யான 12 மாத காலப்­ப­கு­தியில் ஒரு ஒற்றை டெஸ்ட் உட்­பட இந்­தியா ஐந்து தொடர்­களில் வெற்­றி­பெற்­றது. மேற்­கிந்­தியத் தீவுகள் (20), நியூ­ஸி­லாந்து (3–0), இங்­கி­லாந்து (4–0), பங்­க­ளாதேஷ் (1–0), கடை­சியாக அவுஸ்­தி­ரே­லியா (2–1) ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர்­களில் இந்­தியா வெற்­றி­பெற்­றது.

இதே காலப்­ப­கு­தியில் நியூ­ஸி­லாந்து (சொந்த மண்ணில் 1–0, அந்­நிய மண்ணில் 1–0), அவுஸ்­தி­ரே­லியா (2–1), இலங்கை (3–0), ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ரான தொடர்­களில் தென் ஆபி­ரிக்கா வெற்­றி­கொண்­டது.

அவஸ்­தி­ரே­லி­யாவின் பெறு­பே­றுகள் சிறப்­பாக அமை­ய­வில்லை. இலங்கை (0–3), தென் ஆபி­ரிக்கா (1–2), இந்­தியா (1–2) ஆகிய நாடு­க­ளிடம் அவுஸ்­தி­ரே­லியா தோல்வி அடைந்­த­துடன் பாகிஸ்­தானை (3–0) மாத்­திரம் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

நான்காம் இடத்­தி­லுள்ள இங்­கி­லாந்து 2–0 என இலங்­கையை வெற்­றி­கொண்­ட­துடன் பாகி ஸ்தான் (2–2), பங்­க­ளாதேஷ் (1–1) ஆகிய நாடு­க­ளு­ட­னான டெஸ்ட் தொடர்­களை சமப்­ப­டுத்­தி­யது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக 0–4 என தோல்வி அடைந்­தது.

டெஸ்ட் தர­வ­ரிசை (2017 மார்ச் 29 வரை)
இந்­தியா 122 (+1)
தென் ஆபி­ரிக்கா 109 (+2)
அவுஸ்திரேலியா 108 (-1)
இங்கிலாந்து 101
பாகிஸ்தான் 97
நியூஸிலாந்து 96 (-2)
இலங்கை 90
மேற்கிந்தியத் தீவுகள் 69
பங்களாதேஷ் 66
ஸிம்பாப்வே 05

(குறிப்பு: + முன்னேற்றம், – பின்னடைவு)