தவானை வேடிக்கைக்காக ஏமாற்றிய யுவராஜ் சிங்!!

668

ஏப்ரல் 1ம் திகதி முட்டாள் தினம் என்று அழைப்பதுண்டு. இந்த திகதியில் ஒருவர் நமக்கு பிடித்த நபரை ஏமாற்றுவது வழக்கம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை வேடிக்கையாக செய்வார்கள். இந்த வேடிக்கையை சர்வதேச விளையாட்டு வீரர்களும் செய்து சந்தோசம் அடைந்துள்ளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் முன்னணி வீரரான வெயின் ரூனே, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு WWE-ல் கலந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

அதேபோல் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் மெக்கல்லம் இதுதான் தனக்கு கடைசி ஐ.பி.எல். தொடர் என்று வேடிக்கையாக கூறியிருந்தார்.

தற்போது ஐ.பி.எல். தொடருக்கான ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் யுவராஜ் சிங்கும், தவானும் இடம்பெற்றுள்ளனர்.

யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யுவராஜ் சிங் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். தவான் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது யுவராஜ், தவானிடம் ‘‘உங்கள் மனைவி போன் செய்தார்கள். அப்போது உங்களை பற்றி கேட்டார்கள். அவரை உடனடியாக போன் செய்ய சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்’’ என்று கூறினார்.

உடனே, தவான் ஓடி வந்து தனது பேக்கை திறந்து போனை எடுக்க முயற்சி செய்தார். அப்போது யுவராஜ் சிங் ஏப்ரல்-1 முட்டாள் தினத்தன்று உங்களை வேடிக்கைக்காக ஏமாற்றினேன் என்றார்.

உடனே இருவரும் சிரித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.