வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது, பறந்து வந்த வான்கோழியொன்று மோதியதால் காரின் முன்புறக் கண்ணாடி உடைந்ததுடன், அக் கண்ணாடியில் வான்கோழியின் உடல் இறுகிக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
இன்டியானா மாநிலத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் சுமார் 15 கிலோ எடையுள்ள மேற்படி வான் கோழி உடனடியாக இறந்தது. இச் சம்பவத்தினால் தாம் பெரும் அதிர்ச்சியடைந்ததாக காரில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் தெரிவித்து ள்ளனர்.







