வடக்கின் ஜனநாயக வெற்றியை அரசு பாதுகாக்க வேண்டும் : மகிந்த யாப்பா அபேவர்தன!!

556

Mahinda_Yapa_Abeywardena

வடக்கின் ஜனநாயக வெற்றியை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என கமத்தொழில் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மக்களுக்கு சமாதானத்தை பெற்றுக்கு கொடுத்ததால் தெளிவாக அவர்களால் வாக்களிக்க முடிந்தது. வடக்கில் தீவிரவாத மற்றும் பிரிவினைவாதத்தை தோற்கடித்து பெறப்பட்ட இந்த ஜனநாயக வெற்றியை பாதுகாக்க வேண்டியது எமது கடமை.

வடக்கு மாகாண சபையினால் இலங்கையின் எதிர்காலத்தில் தெளிவான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நாட்டின் இறையாண்மை, ஐக்கியம் என்பவற்றை பாதுகாத்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கடமை வடக்கு மாகாண சபைக்கு உள்ளது.

இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.