வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் கட்டட திறப்பு விழா!!

633

 
வவுனியா ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா பாடசாலை அதிபர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (05.04.2017) நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா நகர கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்..பி.நடராஜ், முன்னாள் அதிபர் சு.கருணாநிதி, ஆகியோருடன் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.