இறந்த நேரத்தை துல்லியமாக காட்டும் கடிகாரம்!!

421

death

விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால் தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் வகையில் ஒரு கடிகாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில் இறந்தவரின் உடலில் ஏற்படும் பக்டீரியாக்களின் மாற்றத்தை கொண்டு அவர் இறந்த நேரத்தை துல்லியமாக அறிய முடியும்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் அதி நவீன தொழில் நுட்பம் மூலம் ஜீன்களை பகுத்தாய்வு செய்ய முடியும் என்றும் அதன் மூலம் 48 மணி நேரத்தில் இருந்து நான்கு நாட்கள் வரையிலான கால கட்டத்திற்குள் இறந்த நேரத்தை கண்டறிய முடியும் எனவும் கூறினார்.