1,854 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான பாலம்!!

534

 
சீனாவில் மலைச் சிக­ரங்­களை இணைக்கும் வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாலம் உலகின் மிக உய­ர­மான பால­மாக விளங்கு­கி­றது.

பேய்­பான்­ஜியாங் பாலம் என பெய­ரி­டப்­பட்­டுள்ள இப் ­பாலம், சீ தியூ எனும் நதி­யொன்­றுக்கு மேலாக 565 மீற்றர் (1854 அடி) உய­ரத்தில் உள்­ளது.

இப் ­பா­லத்தின் நான்கு வழி வாகனப் போக்­கு­வ­ரத்து நடை­பெ­று­கி­றது. இப்­ பா­லத்தின் நீளம் 1341 மீற்­றர்­க­ளாகும். 100 கோடி சீனா யுவான் (சுமார் 2152 கோடி ரூபா) செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

இப்­ பா­ல­மா­னது யுனான் மற்றும் குய்ஸோ ஆகிய இரு மாகா­ணங்­களை இணைக்கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

யுனான் மாகா­ணத்தின் ஸுவான்வேய் நக­ரி­லி­ருந்து குய்ஸோ மாகா­ணத்தின் ஷுய்சேங் நகரை அடை­வ­தற்கு முன்னர் 4 மணித்­தி­யா­லங்கள் தேவைப்­பட்­டன.

ஆனால், இப் ­பாலம் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பின் இப் பயண நேரம் ஒரு மணித்தியாலமாக குறைந்துள்ளது.