காதலித்ததால் கௌரவக் கொலை செய்யப்பட்ட இளம்பெண்!!

523

murder

இந்தியாவின் பஞ்சாபில் ஒரு இளம்பெண்ணை கௌரவ கொலை செய்த குடும்பத்தினர் சடலத்தை எரிக்க முயன்றுள்ளனர். இதன்போது பாதி எரிந்த நிலையில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மௌர் குராத் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஹர்ஜிண்டர் கவுர் இவர் ஜக்சிர் சிங் என்னும் நபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

தனது காதலி குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் ஜக்சிர் சிங் பொலிசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பெண்ணின் வீட்டில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அவர்கள் அப்பெண்ணை கொலை செய்ததும் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட சென்றுள்ளதும் தெரியவந்தது.



உடனடியாக இளம்பெண்ணின் சடலத்தை மீட்க சென்ற பொலிசாரால் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மட்டுமே விசாரணைக்காக மீட்கமுடிந்தது.

இவ்வழக்கு தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் 5 பேரை கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.