ஜேர்மனியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் சுரங்க ரயில் பாதையில் கார் ஓட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் போச்சும் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஹுபர்(27).
அளவுக்கு அதிகமாக குடித்து தாறுமாறாக கார் ஓட்டி அடிக்கடி பொலிசில் சிக்கி கொள்வதே இவரது வாடிக்கையாக இருந்தது.
பலமுறை பொலிசாராலும் எச்சரிக்கப்பட்டு உள்ளார், இந்நிலையில் நேற்றும் வழக்கம்போன்று குடித்துள்ளார்.
நன்றாக குடித்த மார்ட்டின் தனது கறுப்பு நிற சிட்ரியோன் காரை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் வீட்டுக்கு கிளம்பினார்.
சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வெறியில் டிராம் வண்டி தடம் மாறி ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டினார். அந்த தண்டவாளம் அப்படியே சுரங்க பாதைக்குள் சென்றது. இவரும் போதையில் சுரங்கத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
உடனடியாக அபாய மணி ஒலிக்கவே சுரங்க தண்டவாளத்துக்குள் கார் நுழைந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
உடனடியாக பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரை பறிமுதல் செய்து மார்ட்டினையும் கைது செய்தனர்.
மேலும் அவருடைய ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.