14,000 வருடங்கள் பழைமையானது என நம்பப்படும் புராதன கிராமம் ஒன்று கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மேற்குப் பிராந்தியத்திலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள தொலைதூர தீவொன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது இக்கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கக் கண்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழைமையான கிராமம் இதுவாகும்.
விக்டோரியா நகரிலிருந்து சுமார் 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ட்ரைகுவெட் தீவில் இக்கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது. மீன் தூண்டில், தீயை உருவாக்குவதற்கான உபகரணங்கள், ஈட்டி முதலானவையும் இக்கிராமத்தில் கண்டெக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பெரும் எண்ணிக்கையிலான மனிதக் குடிவரவு இடம்பெற்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.