2013ம் ஆண்டின் உலக அழகியாக பிலிப்பைன்ஸ் அழகி மேகன் யங்!!

509

Megan Young

2013ம் ஆண்டின் உலக அழகியாக, மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார்.

மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.



இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மொடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டி உலகின் கண்கவர் இடங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் நடந்தது. அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.