இலங்கையின் சதித்திட்டத்தை தடுக்க வேண்டும் : சரத்குமார்!!

493

sarathkumar

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்தி விடுவித்து விட்டு நம் மீனவர்களின் படகுகளை மட்டும் அவர்களே கைப்பற்றிக் கொள்ளும் ஒரு முடிவை எடுத்திருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியதாகும்.

இப்படிப்பட்ட தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தரும்படியான சூழ்நிலையை உருவாக்கி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிடும் சதித்திட்டத்தை இலங்கை தீட்டியுள்ளது.



படகுகளைக் கைப்பற்றிக் கொண்டால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க வரமாட்டார்கள் என்ற குரூர புத்தியுடன் இலங்கை செயல்படுகிறது. தமிழக மீனவர்கள் பல நூறு பேர் கொல்லப்பட்ட நிலையிலும், நமது மீனவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்ட போதிலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மத்திய அரசின் நிலையை உணர்ந்துதான் இலங்கை மேலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கையின் தேசிய சொத்து என அறிவித்திருப்பது மிகப்பெரிய மோசடியாகும். இதை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இந்திய மத்திய அரசு இதுபோன்ற நிலையை உருவாக்க விடாமல் தடுத்த நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.