குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிர்வாணமாக வீதியில் உலவுவதாக மின்வலு பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர சவால் விடுத்துள்ளார்.
தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் ஒரு அங்குலத்தையேனும் அபகரித்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் ரத்தினபுரி நகரில் நிர்வாணமாக செல்வேன்.
தேயிலைத் தோட்டமொன்றின் மூன்று ஏக்கரை அபகரித்துள்ளதாக போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
பரம்பரைச் சொத்தைப் பயன்படுத்தியே அரசியல் நடத்துகின்றேன்.
எனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்வோருக்கு இடி விழ வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.