பிரான்ஸ் பெஷன் ஷோவில் கருப்பின பெண்கள் நிராகரிப்பு!!

583

fashion show

பாரிஸ் பெஷன் ஷோக்களில் கருப்பின பெண்கள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறும் பெஷன் ஷோவில் பல நாட்டு பெண்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கலந்து கொள்ளும் பெண்களில் கறுப்பு இன பெண்களை அழகியாக தெரிவு செய்வதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டிற்கு அந்நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகையில் நாங்கள் நிகழ்ச்சியில் வெள்ளை நிற பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

மற்றொரு வடிவமைப்பாளரான டாமிரா டொமா தான் கலரின் அடிப்படையில் தீர்மானிப்பது கிடையாது என்றும் சரியான நபரை மட்டுமே தெரிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இனரீதியாக பார்ப்பதில்லை என்றும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது என்றும் பெஷன் ஷோ பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.