பள்ளி மாணவியை கடத்தி சென்ற திருமணமான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (32). விவசாயம் செய்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ்க்கு அதே பகுதியில் உள்ள ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மயக்கிய ரமேஷ் அவரை கடத்தி சென்றுள்ளார்.
பின்னர், தனது மகளை காணவில்லை என மாணவியின் அம்மா பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் மாணவியுடன் ரமேஷ் பொம்மிடி பஸ் நிலையம் அருகே இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற அவர்கள் மாணவியை மீட்டு, ரமேஷை கைது செய்தனர். ரமேஷ் மீது இளம் பெண்கள் பாலியல் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.