ஜெய்பூர் மகாராணியின் 70வது பிறந்த நாள் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பு!!

403

Amitabh-Bachchan

ஜெய்பூர் மகாராணி பத்மினி தேவியின் 70வது பிறந்த நாள் விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பங்கேற்றார்.
ஜெய்பூரின் முன்னாள் மகாராஜா ராஜேந்திர பிரகாஷ் – மகாராணி இந்திரா தேவி தம்பதியரின் மகள் மகாராணி பத்மினி தேவி.

ஜெய்பூர் அரச வம்சத்தை சேர்ந்த பிரிகேடியர் பவானி சிங் என்பவரை மகாராணி பத்மினி தேவி 1966ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பவானி சிங் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் ஜெய்பூர் மகாராணி பத்மினி தேவியின் 70வது பிறந்த நாள் விழா நேற்று ஜெய்பூர் அரண்மனையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தனிவிமானம் மூலம் ஜெய்பூர் வந்த நடிகர் அமிதாப் பச்சன் மகாராணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அமிதாப் பச்சன் ஜெய்பூருக்கு வரும் தகவல் கடைசிவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.