அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற, நியூயோர்க்கின் மெட்ரோபொலிட்டன் ஆடை வடிமைப்புக் கலை நூதனசாலையின் வருடாந்த பெஷன் விழாவில் (Met Gala) மிக நீண்ட வாற்பகுதி கொண்ட ஆடையை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்தார்.
அமெரிக்காவின் பிரபல பெஷன் டிஷைனர் ரல்வ் லொரேனினால் வடிவமைக்கப்பட்ட இந்த “ட்ரென்ச் கோட்” ரக ஆடையின் 20 அடி நீளமான வாற்பகுதியைக் கொண்டிருந்தது. இந்த ஆடை முறையாக காட்சியளிப்பதை உறுதிப்படுத்துவதற்காக இரு உதவியாளர்கள் பிரியங்காவுக்கு அருகில் இருந்தனர்.
இவ்விழாவில் பிரபலங்கள் பலரும் பொலிதீன், சாக்கு, உலோகங்கள் என பல்வேறு பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த ஆடை குறித்து அதிகம் பேசப்பட்டது. விழாவுக்குப் பொருத்தமான வகையில் அவரின் ஆடை அலங்காரம் இருந்தது என பலர் பாராட்டினர்.
அதேவேளை, பலர் இந்த பிரமாண்ட ஆடையை வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என விளக்கி படங்களை உருவாக்கி டுவிட்டரில் வெளியிட்டு பிரியங்கா சோப்ராவை கலாய்த்தனர். ஆனால், இதற்காக பிரியங்கா கோபப்படவில்லை. மாறாக, இந்த கலாய்ப் புகளில் தனக்கு மிகவும் பிடித்தவற்றை சமூக வலைத்தங்களில் வெளியிட்டார் பிரியங்கா சோப்ரா.
34 வயதான பிரியங்கா சோப்ரா நடித்த முதல் ஹொலிவூட் திரைப்படமான பே வோட்ச் இம்மாதம் 25 ஆம் திகதி அமெரிக்காவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









