வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.
இவர்களின் போராட்டம் இன்று (14.05.2017) 11ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி போன்ற பகுதிகளிலுள்ள சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து வவுனியா போராட்டக்களத்துடன் இணைந்து நேற்று முதல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து 20 சுகாதாரத் தொண்டர்களும் வவுனியாவில் தங்கியிருந்து போராட்டகளத்தில் தமது
நியமனத்திற்காக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் போராட்ட களத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியதுடன் சுகாதாரத்
தொண்டர்களின் போராட்டம்
நியாயமானது என்று தெரிவித்து நியமனம் வழங்குவதற்கு வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
நியமனம் கிடைக்கும் வரையில் தமது போராட்டத்தினை
மேற்கொள்ளுவதாகவும் யாழ்ப்பாணத்தில் தம்மால் மேற்கொண்ட போராட்டத்திற்கு ஆதரவு வழங்க எவரும் முன்வரவில்லை எனவே வவுனியாவிலுள்ள போராட்ட களத்தில் இணைந்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போராட்டகளத்திலுள்ள சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.