பிரித்தானியாவில் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்திய குற்றங்களுக்காக இரண்டு தமிழர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Wallasey நகரை சேர்ந்த இளவரசன்(26) என்பவரும் Wigan நகரை சேர்ந்த வினோதன் ராஜேந்திரம்(27) என்பவரும் சகோதர்கள் ஆவர்.
தமிழர்களான இருவரும் கடந்த 2010 முதல் 2016ம் ஆண்டு வரை Birkenhead, Walton மற்றும் Garston நகரங்களில் உள்ள வர்த்தக மையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த காலக்கட்டத்தில் இவர்களது கடைகளுக்கு வந்த சிறுமிகளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் பாசாங்கு செய்து வந்துள்ளனர்.
சிறுமிகளுக்கு இலவசமாக இனிப்புகள், அவர்களது செல்போன்களுக்கு இலவசமாக ரீ-சார்ஜ் செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து அவர்களின் நம்பிக்கையை பெற்று வந்துள்ளனர்.
சகோதர்கள் மீது நம்பிக்கை கொண்ட 9 சிறுமிகள் அவர்களது கடைகளுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். சிறுமிகளுடன் இருவரும் அடிக்கடி வெளியே சென்று பொழுதை கழித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை சகோதரர்கள் இருவரும் காரில் அழைத்துச்சென்றுள்ளனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர்.
பின்னர், மதுபோதையில் இருந்த சிறுமிகளுடன் சகோதரர்கள் இருவரும் பாலியல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
லிவர்பூல் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்துள்ளது. அப்போது, சிறுமிகளை பாலியல் ரீதியாக தாக்குவதற்காகவே அவர்களிடம் நண்பர்களை போல் இருவரும் நடித்து வந்துள்ளனர்.
இருவரின் குற்றங்களும் மன்னிக்க முடியாதது. எனவே, முதன்மை குற்றவாளியான இளவரசனுக்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும், இரண்டாவது குற்றவாளியான வினோதனுக்கு 18 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.