வவுனியா உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புதுவருட நிகழ்வு!!

1088

 
வவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட பாரம்பரிய நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து சிறப்பித்திருந்தார்.

சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக அமைப்பாளர் வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.