முகநூல் பதிவுகளில் கட்டுப்பாடு : மார்க் சக்கர்பெர்க் அறிவிப்பு!!

709

உலகம் முழுவதும் ஏறக்குறைய 200 கோடி பயனாளர்களை கொண்டிருக்கும் சமூக வலைதளமாக, முகநூல் திகழ்கிறது.

தகவல் பரிமாற்றங்கள், சொந்தக் கருத்துகளைக் கட்டுப்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால், நாளுக்குநாள் முகநூல் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
மாறிவரும் காலநிலைக்கு ஏற்றபடி தரவுகளை முகநூல் வழங்கி வருகிறது.

சாமி கும்பிடுவது, ஆற்றில் நீந்துவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று அவரவர் மகிழ்ச்சியை செல்போனில் படம்பிடிப்பது இயல்புதான். ஆனால், அதையே லைவ்-வீடியோவாக உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யவும் வழிகொடுத்திருப்பது முகநூல்தான்.

நல்ல விடயத்தில் கெட்டதும் கலப்பதுபோல லைவ்-வீடியோ பதிவில் கொலை, தற்கொலை போன்றவற்றையும் பதிவேற்றம் செய்கிற போக்கும் அதிகரித்துவருவது முகநூலின் மதிப்பைக் குறைப்பதுபோல ஆகிவிட்டது.

இதுகுறித்த புகார்கள் முகநூலின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் கவனத்துக்குச் சென்றுள்ளது.
வருங்காலங்களில், இப்படிப்பட்ட பதிவேற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் அவைகளை முகநூலில் இருந்து நீக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியை மேற்கொள்ள மட்டுமே 3000 பணியாளர்கள், திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர் என்று மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

முகநூலில் இனி நல்ல முகங்களை, நல்ல தகவல்களை மட்டுமே பதியலாம் பார்க்கலாம் என்பது நல்ல விடயம்தான்.