மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் : சவுதியில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு!!

809

சவுதி அரேபியாவில் பொலிசாரின் ரோந்து வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பொலிசார் காயம் அடைந்தனர்.

இதற்கு முன்னதாக இரு தடவை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் கிழக்கு சவுதியில் உள்ள பொலிசாரின் ரோந்து வாகனத்தில் வெடிகுண்டு வெடித்தது.

அங்குள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்களை பொலிசார் கண்காணித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதை சவுதியின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து உள்துறை சார்பில் பேசிய நபர், கிழக்கு சவுதியில் உள்ள Qatif மாகாணத்தில் உள்ள பொலிஸ் வாகனத்தில் குண்டு வெடித்துள்ளது.

இது தீவிரவாதிகள் செய்த செயல் தான் என கூறிய அவர், விசாரணையை அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.