அனர்த்தத்தில் சிக்கிய இலங்கை நண்பர்களுக்கு உதவி கோரும் பிரித்தானிய பெண்!!

464

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தனது நண்பர்களுக்கு உதவி செய்ய பிரித்தானிய பெண்ணொருவர் முன்வந்துள்ளார்.

தனது நண்பர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

Miriam Agat என்ற பிரித்தானிய பெண்ணே, தனது நண்பர்களுக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அவர் ஒரு வலைத்தள பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாக நிதி உதவி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “நான் கடந்த வருடம் இலங்கைக்கு சென்ற போது பல வித்தியாசமான நண்பர்களை கண்டுபிடித்தேன்.

நான் உண்மையிலேயே அங்கு அன்பானவர்களை சந்தித்தேன். அவர்கள் தற்போது ஏற்பட்ட கொடூரமான வெள்ளப்பெருக்கிற்கு பின்னர் போராடி வருகின்றார்கள்.

நான் அங்கு சந்தித்த நண்பர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். அங்கு மின்சாரம் துண்டுடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. வீட்டை விட்டு இடம்பெயர்ந்த எனது நண்பர்களுக்கு உதவ வேண்டும்.

அதற்காக நிதி சேகரிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். தேவைகள் உள்ளவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் தங்கள் உதவிகளை வழங்குமாறு கேட்டு கொள்கின்றேன்.

சிறிய உதவிகளை கோரியுள்ளவர்களுக்கு நாம் உதவுவோம். நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.